search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கட்சி"

    மதுரை பாராளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
    மதுரை:

    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    மதுரை தொகுதியில் 11 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் 2,69,382 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் ராஜ் சத்தியன் இருந்தார். அவர் 1,80,147 வாக்குகள் பெற்றிருந்தார்.

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் 51 ஆயிரத்து 310 வாக்குகளும், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை 44 ஆயிரத்து 900 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டியம்மாள் 25 ஆயிரத்து 973 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
    குடிநீர் விநியோகத்திற்கு இடையூறு செய்தது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை அடுத்த கரிக்காப்பட்டி ஊராட்சி தாண்டான்வளவில் 3 சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 35), அவரது மனைவி செல்வி(27) மற்றும் பொன்னுவேல் மனைவி சித்ரா(35) ஆகியோர் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வரவில்லை.

    இதனால் மற்ற பகுதிகளுக்கும், குடிநீர் விநியோகிக்ககூடாது என இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஜலகண்டாபுரம் போலீசார், மேற்கண்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நங்கவள்ளி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வெங்கடேசன்(40) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. #tamilnews
    குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக போதிய தண்ணீர் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. இதே ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளும் பல நேரங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்டு மிகுந்த நாசத்திற்கும், நஷ்டத்திற்கும் டெல்டா மாவட்ட மக்கள் ஆளாகியுள்ளார்கள்.

    வழக்கம்போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    நாங்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் மூலம் ஆணையத்தை பெற்றுவிட்டோம் எனக் கூறி தமிழக மக்களை ஏமாற்றுவதை கைவிட்டு, உடனடியாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு தேவையானால் இதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வற்புறுத்தி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    ×